Nostradamus Predictions
தற்காலத்தில் நிகழும் பல மாற்றங்களுக்கு வித்திட்டமைக்காக நாம் போற்றும் விஞ்ஞானிகள், தத்துவஞானிகள் மற்றும் கலைத்துறையினர் போன்றோரில் பலர், அவர்களது காலத்தில் தலைவர்களாலும் மக்களாலும் தூற்றப்பட்டதே வருத்தத்திற்குரிய உண்மை. அவர்களுள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எதிர்கால நிகழ்வுகளை ஆரூடம் கூறியவரே Nostradamus என அறியப்படும் Michel de Nostredame ஆவார்.
கி.பி 1503 ஆம் ஆண்டு France நாட்டில் பிறந்த இவர் மருத்துவர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர் மற்றும் சோதிடர் எனப் பன்முகங்களைக் கொண்டிருந்தார். அக்காலத்தில் நிலவிய கொடிய நோயான Plague ஐ ஒழிப்பதில் பாரிய பங்காற்றினார். எனினும் 1555 இல் இவரது ஆக்கத்தில் வெளியான 'Les Prophéties' எனும் நூலே இன்றுவரை தொடரும் இவரது புகழுக்குக் காரணம்.
இந்நூல் நாலடி கொண்ட விடுகதை வடிவிலான 942 கவிதைகளைக் கொண்டுள்ளது. அதாவது இவர் தான் அறிந்தவற்றை மற்றவர்கள் இலகுவாக அறிந்து கொள்ளும் வடிவில் எழுதவில்லை. இவரது எதிர்வுகூறல்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானதாக இருந்ததாகக் கிளம்பிய விமர்சனங்கள் காரணமாகவே எழுத்து வடிவில் அப்படி மறைமுகமாகக் கூறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும் இவ்வாறான கணிப்புகளுக்கு, நட்சத்திரங்களையும் கிரகங்களையும் அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய சோதிடத்தை மட்டும் இவர் பயன்படுத்தவில்லை என்பது சுவாரஸ்யமானது. பிரபலமான பல வரலாற்று ஆய்வாளர்களின் நூல்கள் மூலம் வரலாற்றைப் பெருமளவில் ஆராய்ந்த இவர், 'History Repeats', அதாவது 'நிகழ்ந்தவையே மீண்டும் நிகழும்' என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே பலவற்றை எதிர்வுகூறியுள்ளார்.
இந்நூலில் அவரது காலத்திலிருந்து கி.பி 3700 ஆம் ஆண்டு வரையான காலத்தில் நடைபெறலாம் எனப் பல நிகழ்வுகளை எதிர்வுகூறியிருந்தார். இதில் ஆச்சரியம் என்னவெனில் இதுவரையான காலத்தில் நடைபெறும் என அவர் கூறியிருந்த பல பெரிய நிகழ்வுகள் இவ்வுலகில் அரங்கேறியுள்ளன. அவற்றுள் சில முக்கியமான உதாரணங்கள்,
1. இரு உலகமகாயுத்தங்கள்
2. ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டுத்
தாக்குதல்
3. நெப்போலியனின் எழுச்சி
4. ஹிட்லரின் எழுச்சி
5. French புரட்சி
6. அமெரிக்காவின் வளர்ச்சி
7. Apollo விண்கலம் நிலவில்
தரையிறங்கியமை
தரையிறங்கியமை
8. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம்
தாக்கப்பட்டமை.
சுருக்கமாகக் கூறினால் நாம் அறிந்துள்ள பாரிய உலக சம்பவங்கள் பலவும் இவரது நூலில் உள்ளன.
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் தோல்வியையும் கூறியிருந்தார். இதையறிந்த ஹிட்லர் தனது படைவீரர்களுக்கு தைரியத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதற்காக Nostradamus இன் இப்போரைப் பற்றிய கவிதைகளை தனக்கு சாதகமாக சற்று வார்த்தைகளை மாற்றி அவற்றை துண்டுப்பிரசுரங்களாக வழங்கியதும் வரலாற்றில் உள்ளது.
இப்போது இவர் இந்த 2020 ஐ சூழவுள்ள காலத்தைப் பற்றி என்ன கூறியுள்ளார் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கும். தற்போது இயற்கையின் பொறுமையை சோதித்து அதன் சீற்றத்துக்கு நாம் ஆளானதையும் மற்றும் பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிரிழப்பையும் அவர் அப்போதே அறிந்துள்ளார். இதைவிட பல மதங்களிலும் புராணங்களிலும் கூறப்படும் ஒரு அவதாரத்தைப் பற்றியும் இக்காலத்தோடு தொடர்புபடுத்திக் கூறியுள்ளார் என நம்பப்படுகிறது.
இவர் அதிகமாக பல அழிவுகளைப் பற்றியே கூறியுள்ளார். அவை நடைபெறும் என இவர் கணித்த ஆண்டுகள் ஓரிரு வருடங்களால் மாறினாலும், தான் தனியாகவே அவற்றை செய்ததாலும், கணிதத்தில் பாரிய திறமையின்மையாலும் அந்தக் குறைகள் காணப்படும் என அவரே குறிப்பிட்டுள்ளார். மேலும் 1566 இல் நடைபெற்ற தனது மரணத்தையே இவர் கணித்துள்ளதும் வியப்புக்குரியது. எவ்வாறாயினும், 3700 ஆம் ஆண்டு வரையான இவரது எதிர்வுகூறல்கள் காரணமாக மேலும் 1000 ஆண்டுகளுக்கு மேல் இவரது பெயர் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
Nice article
ReplyDeleteValuable comment
Valuable content
ReplyDelete