Anunnaki Dynasty
உலகத்தில் உள்ள பறவை விலங்குகள் ஏனைய உயிரினங்களை விட மனிதனிற்கு மட்டும் ஏன் பகுத்தறிவு உள்ளது, இப்படி என்றாவது யோசித்தது உண்டா? இதை பற்றி 4000 BC இல் Sumerian நாகரீகத்தை கூறியதாவது
Anunnaki களே மனித இனத்தை உருவாக்கியவர்கள் என சுமேரிய நாகரீகம் கூறுகிறது. நம்முள் அடுத்து எழும் கேள்வி இவர்கள் ஏன் மனித இனத்தை உருவாக்க வேண்டும்? மற்றும் யார் இந்த Anunnaki ? என்று தான் இருக்கும்.
Anunnaki நிபிரு என அழைக்கப்படும் கிரகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கிரகம் 3000ஆண்டுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் வருமெனவும் கூறப்படுகிறது. Niburu கிரகம் சூரியனை சுற்றி வர சுமார் 20,000 - 30,000 வருடங்கள் ஆகும் (அறிவியலில் இன்னும் உறுதி செய்யவில்லை). இவர்கள் பூமிக்கு வர காரணம் இங்குள்ள தங்கத்தை எடுத்து செல்லவாகும் . ஆனால் இவர்கள் வந்த காலப்பகுதியில் மனிதர்கள் மனித குரங்கில் இருந்து பரிணாமம் அடைந்து வேட்டையாடி வசித்து வந்தனர். ஆகையால் அக்கால மனிதரை கொண்டு Anunnaki களுக்கு வேலை வாங்க முடியவில்லை. ஆகவே தமது DNA வையும் கற்கால மனிதர்களின் DNA வையும் கலந்து உருவானதே மனிதன் (Hybrid) என்று கூறுகிறது Anunnaki கோட்பாடு.
அறிவியலின் படி குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்துதான் மனிதன் உருவானான். அப்படியானால் Anunnaki உருவாக்கிய மனிதர்கள் யார்? உலக சனத்தொகையில் பெருபான்மையான மக்களுக்கு RH Positive வகை குருதி யே காணப்படுகிறது. ஆனால் RH Negative வகை குருதி Anunnakiயால் உருவாக்கப்பட்ட மனிதர்களராக இருக்கலாம். அதுமட்டும் அன்றி இவ்வகை குருதி 'Royal Blood' எனவும் கூறப்படும். அரச குடும்பத்தினருக்கு பல பணக்காரர்களுக்கும் இவ்வகை குருதியே உள்ளது. இவர்கள் நவீனகால iluminati களாக இருக்கக்கூடும்.
Anunnakiகளுக்கு ஏன் தங்கம் தேவை பட்டது? தங்கம் ஒரு சிறந்த மின் கடத்தி வெப்பநிலை நிலைப்படுத்தி மற்றும் infrared கதிர்களில் இருந்து பாதுகாக்க கூடியது இக்காரணங்களுக்காக தேவைப்பட்டு இருக்கலாம் .ஆனால் இவர்கள் பூமியை விட்டு சென்றமை பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன
Anunnaki கோட்பாடு கட்டுக்கதையாகும் என பல வரலாற்றலாளர்கள் கூறுகிறார்கள்.
இதன் உண்மைத்தன்மை இன்னும் அறியப்படவில்லை.
- அக்கால பகுதியில் பெருவெள்ளம்(Flood Myth) ஏற்பட்டதாகவும் அதற்காக இவர்கள் சென்று இருக்கலாம்
- இவர்களால் உருவாக்கப்பட்ட மனிதர்கள் கிளர்ச்சி செய்தமை
- இவர்கள் தங்கள் DNA பயன்படுத்தி மனிதர்களை உருவாக்கியது பிடிக்காமல் அவர்களது கிரகவாசிகளின் கட்டாயத்தால் திரும்பி சென்றிருக்கலாம்
Anunnaki கோட்பாடு கட்டுக்கதையாகும் என பல வரலாற்றலாளர்கள் கூறுகிறார்கள்.
இதன் உண்மைத்தன்மை இன்னும் அறியப்படவில்லை.
No comments:
Post a Comment