Deja vu
இப்போது உங்களில் பலருக்கு 'ஆமாம். இதேபோல் எனக்கும் பல சமயங்களில் அனுபவம் ஏற்பட்டுள்ளது' என்றும், வேறு சிலருக்கு 'முதல் காட்சியை ஏற்கனவே பார்ப்பது எப்படி சாத்தியம்?' என்றும் தோன்றலாம். ஏனெனில் உலகில் 70% மக்களுக்கே இப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு நிகழ்காலத்தில் நடைபெறும் ஒரு விடயம் ஏற்கனவே நிகழ்ந்தது போல் தோன்றுவதே Deja Vu எனப்படுகிறது. "Already seen" என்பதே இந்த French பெயரின் நேரடியான அர்த்தம்.
மேலுள்ளதை வாசித்தே சில சிந்தனையாளர்கள் பல யூகங்களைக் கண்டுபிடித்திருக்கலாம். முன்ஜென்ம ஞாபகங்கள், தீர்க்கதரிசனம் மற்றும் அதிசக்தியாளர்கள் என்பன அவ்வாறு காலம் காலமாக உள்ள யூகங்களுள் சில. இருப்பினும் செயற்கை நுண்ணறிவு, அதாவது Artificial Intelligence வரை வளர்ந்து விட்ட இன்றைய விஞ்ஞான யுகத்தில் இந்த சுவாரஸ்யமான தோற்றப்பாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என நம்பக்கூடிய அர்த்தமுள்ள அறிவியல் விளக்கத்தை அறிந்திருப்பதே சிறந்தது.
எமது உடலின் வலது பக்கம் முழுவதையும் இடது மூளையும், இடதுபக்கம் முழுவதையும் வலது மூளையும் கட்டுப்படுத்துகின்றன. உடலிலுள்ள புலனங்கங்கள் உள்வாங்கும் தூண்டல்கள் அனைத்தும் சமிக்ஞைகளாக மாற்றப்பட்டு நரம்புகள் மூலம் மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு செயற்படுத்தப்பட்டே துலங்கல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
மேலும் இரு கண்களும் பார்க்கும் விடயங்களின் சமிக்ஞைகள் ஒரே நேரத்தில் இருபக்க மூளையையும் அடையும். இதில் சில வேளைகளில் மிகச்சிறிய நேர வேறுபாடு ஏற்படுமாயின், ஒருபக்க மூளை பெற்ற சமிக்ஞை செயற்படுத்தப்பட்ட பின்னரே மறுபக்க மூளையின் செயற்பாடு இடம்பெறக் கூடும். இதன் காரணமாக ஒரே காட்சிக்கு இரு துலங்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இது, Deja Vu தோற்றப்பாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதும் உறுதிப்படுத்தப்படாத விளக்கமாகும்.
இந்த விந்தையான தோற்றப்பாட்டை கருவாகக் கொண்டு Run Lola Run , Groundhog Day மற்றும் Edge of Tomorrow போன்ற பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. Michael Hartstein என்பவரால் Deja Vu என்ற நாவலும் எழுதப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக தீர்க்கப்பட முடியாதிருந்த பல கேள்விகளுக்கு விடையளித்து, மேலும் பல முடிச்சுக்களை அவிழ்க்க போராடும் இந்த குறுகியகால விஞ்ஞான தொழினுட்ப வளர்ச்சி, Deja Vu தோற்றப்பாட்டுக்கு கண்டுபிடிக்கவிருக்கும் உறுதியான விளக்கத்தைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment