Big Bang Theory
நட்சத்திரங்கள், கோள்கள் மேலும் பல விண்பொருட்கள் அடங்கிய இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதற்கு பொதுவான விளக்கமே Big Bang Theory (பெருவெடிப்புக் கோட்பாடு) ஆகும். இது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது.
Big Bang Theory படி அண்டவெளி அனைத்தும் ஏறத்தாழ 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் மிகவும் அடர்த்தியான சிறிய தீப்பிழம்பு சக்தி வடிவில் இருந்திருக்கிறது. பின் இதுவரை உறுதியாக அடையாளம் காணப்படாத ஏதோ ஒரு காரணத்தால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கியது. இதுவே Big Bang எனப்படுகின்றது. இப்போதும் கூட அண்டம் இன்னும் விரிவடைவதாகவும் அதன் வெப்பநிலை குறைவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலம், வெளி, ஈர்ப்பு விசை, அணுத்துகள்கள் போன்றவை Big Bang நிகழ்ந்த உடனேயும், கோடிக்கணக்கான ஆண்டுகள் கழித்தே ஏனைய விண்பொருட்கள் உருவானதாகவும் கூறப்படுகிறது. மேலும் சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து தற்காலமானது ஏறத்தாழ ஐநூறு கோடி ஆண்டுகள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அண்டம் உருவானது தொடர்பில் பல கோட்பாடுகள் காணப்படினும் விண்வெளி பற்றிய ஆராய்ச்சி செய்யும் Cosmology எனும் துறை சார்ந்த விஞ்ஞானிகளின் இதுவரையான கண்டுபிடிப்புக்களுடன் Big Bang Theory யே பெரிதும் ஒத்துப்போகின்றது.
No comments:
Post a Comment