Butterfly Effect
உலகின் பல மூலைகளிலும் நடைபெறும் பெரிய சம்பவங்கள் அனைத்தும், எங்கோ நடைபெற்ற ஏதோ ஒரு மிகச்சிறிய நிகழ்வின் தொடர்ச்சியே எனும் தத்துவமே Butterfly Effect ஆகும். சற்றுக் குழப்பமானது என்றாலும் பலருக்கும் நிச்சயம் இது ஆர்வத்தை ஏற்படுத்தும்.
Brazil இல் ஒரு பட்டாம்பூச்சி சிறகடிப்பதால் நிகழும் தொடர்ச்சியான நிகழ்வுகளால் Texas இல் பாரிய புயல் உருவாகலாம் என்ற சிக்கலான உதாரணத்தின் அடிப்படையில், 1960 களில் Edward Lorenz என்பவரால் இப்பெயர் சூட்டப்பட்டது.
1914 இல் ஹங்கேரியின் இளவரசர் Franz Ferdinand, Bosnia வீதிகளில் உலா வரும்போது ஓட்டுனர் தவறான ஒரு வீதியில் தெரியாமல் திரும்பிய போது ஒரு புரட்சியாளர் மேல் தவறுதலாக மோதிவிட்டார். இதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய அந்த புரட்சியாளர் இளவரசரையும் அவர் மனைவியையும் அதே இடத்தில் சுட்டுக் கொன்றார். இதனால் ஹங்கேரிக்கும் சேர்பியாவுக்கும் இடையில் பகை மூண்டு, பின் இரண்டு நாடுகளுக்கும் Russia, Germany, France மற்றும் Britain போன்ற நாடுகள் ஆதரவளித்து இறுதியில் அது இரண்டாம் உலகமகாயுத்தம் என முழு உருவெடுத்தது.
இதன் விளைவாக பல மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சாதாரண போர் சிப்பாயாக இருந்த ஹிட்லர், தலைவனாகி வரலாற்றில் இடம்பிடித்தார். இன்றும் கூட விண்வெளி விஞ்ஞானத்தில் பயன்படும் ஐன்ஸ்டீனின் தத்துவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இவ்விளைவுகள் அனைத்துக்கும் அந்த ஓட்டுனரின் கவனயீனம் ஒரு வித்தாக அமைந்தது.
இப்போது Butterfly Effect பற்றி ஓரளவு தெளிவு ஏற்பட்டிருக்கும். மேலும் இதைக் கருவாகக் கொண்டு Chaos Theory, Mr. Nobody, About Time மற்றும் The Butterfly Effect போன்ற பல திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ஒருவரைச் சூழ நிகழும் அனைத்தும் அவரே அறியாத ஒரு நபர் தன்பாட்டில் செய்யும் செயல்களால் தான் என்பது விந்தையாகவே உள்ளது.
No comments:
Post a Comment